Hollywood movie tamil review
Awake 2007
கதைகரு :
இருதய அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து வேலை செய்யவில்லை என்றால்?
கதை சுருக்கம் :
படத்தின் கதாநாயகன் மிகப் பெரிய பணக்காரன்.
அவன் தாயுடன் வசித்து வருகிறான்.
குடும்பத்தில் வேறு யாருமில்லை.
அவர்களின் கணக்குகளைப் பார்த்துக் கொள்ள ஒரு இளம்பெண் வேலையில் உள்ளாள்.
மகனோ அந்தப் பெண்ணுடன் காதல் கொள்கிறான்.
இவர்களின் காதலை தன் தாயிடம் எப்படி கூறுவது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.
மகனுக்கு உடலில் பிரச்சனைகள் உள்ளன.
அவனுக்கு இருதயம் மாற்றப்பட வேண்டும்.
இல்லையென்றால் அவன் விரைவாக இறந்துவிடுவான்.
இதன் காரணமாக மிகப்பெரிய டாக்டர்களை தாய் வர வைக்கிறார்.
ஆனால் மகனோ தாயிடம் கோபம் கொண்டு தனது உயிர் நண்பன் ஒரு மருத்துவர் எனவும், அவன் தான் தனக்கு இருதயத்தை மாற்ற போகிறான் எனவும் உறுதியாகக் கூறிவிடுகிறான்.
அறுவை சிகிச்சை நடக்கிறது.
ஆனால் சிகிச்சையின் போது தனக்கு மயக்க மருந்து வேலை செய்யவில்லை என்பதை அறிகிறான்.
ஆனால் அவனது உடலானது மயங்கி விட்டது.
ஆனால் அவனால் வலியினை உணர முடிகிறது.
துடிக்கிறான்.
கதறுகிறான்.
அவனின் உயிரானது உடலை விட்டுப் பிரிந்து வெளியே உலவுகிறது.
அப்பொழுதுதான் தன்னைச் சுற்றி நடக்கும் பல ஏமாற்று சதிவேலைகளை கண்டறிகிறான்.
தனது உடலை காப்பாற்றி மீண்டும் இவன் உயிர் பிழைத்தானா என்பதே துரோகங்கள் நிறைந்த மீதிக்கதை.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.