Hollywood Movie Tamil ReviewBad samaritan 2018
கதைகரு :
திருடச்சென்ற இடத்தில் கடத்தப்பட்டு வைத்திருக்கும் பெண்ணை காப்பாற்ற போராடும் திருடன்.
கதை சுருக்கம் :
இளைஞர்கள் இரண்டு பேர் திருட்டு தொழில் செய்கின்றனர்.
கார்கள் நிறுத்தும் இடத்திற்கு வரும் கார்களை உடைத்து அதன்மூலம் அவர்களின் வீடுகளுக்குச் சென்று திருடிவிட்டு மீண்டும் பழைய இடத்திலேயே காரை நிறுத்திவிடுவது தான் இவர்களின் திருட்டு வேலை.
அந்தவகையில் ஒரு பணக்கார காரினை திருடி அதன் உரிமையாளர் வீட்டுக்கு செல்கின்றனர்.
அங்கே திருடும் போது ஒரு ரகசிய அறையை கண்டுபிடிக்கின்றனர்.
அந்த அறையில் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டு மோசமான நிலையில் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை காண்கிறார் நாயகன்.
அவளை காப்பாற்ற காவல்துறையினரிடம் தகவல் கொடுக்கிறார்.
ஆனால் அவர்கள் வந்து பார்க்கும் பொழுது அந்த அறையும் அந்த பெண்ணும் அங்கு இல்லை.
அந்த வீட்டின் உரிமையாளர் இந்த திருடனைப் பற்றி அறிந்து கொள்கிறார்.
தனது பண பலத்தை கொண்டு இந்தத் திருடனின் வாழ்க்கையில் பல வினோதமான செயல்களை ஏற்படுத்துகிறார்.
திருடன் பணக்காரரிடம் மோத முடியாமல் சிக்கித் தவிக்கிறார்.
இறுதியில் கடத்தப்பட்ட பெண்ணை இந்த திருடன் காப்பாற்றினாரா?
இல்லை பணக்காரனிடம் சிக்கிக் கொண்டு தன் உயிரை இழந்தாரா?
என்பதே படத்தின் மீதி கதை
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.