Hollywood Movie Tamil ReviewAlpha 2018
கதைகரு :
ஓநாயுடன் மனிதனுக்கு ஏற்படும் பாசப் பிணைப்பு.
கதை சுருக்கம் :
படத்தின் நாயகன் ஒரு இளம் வாலிபன். அவன் தனது குடும்பத்துடன் காட்டுப் பகுதியில் வசித்து வருகிறான். அந்த கூட்டத்தின் தலைவர் கதாநாயகனின் தந்தை.
தனது மகனுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளிக்கிறார்.
இறுதியாக ஒரு கடினமான போட்டி நடக்கிறது.
அந்தப் போட்டியில் கொடூரமான மாடுகளுடன் போராடி வேட்டையாட வேண்டும்.
இதில் மகன் சிறப்பாக செயல்படுகிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக படத்தின் நாயகன் மாடுகளால் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து விடுகிறார்.
தனது மகன் பிழைத்திருக்க முடியாது, அவன் இறந்து விட்டான் என நினைத்து தந்தை மற்றும் அனைவரும் சென்று விடுகின்றனர்.ஆனால் மகனோ கீழே விழுந்து மயக்கத்தில் உள்ளார்.
விழித்துப் பார்க்கும் பொழுது தான் உடல்நிலை பாதிக்கப் பட்டிருப்பதாக உணர்கிறார். தனது கிராமத்திற்கு மீண்டும் செல்ல பல நாட்கள் நடக்க வேண்டியது இருக்கும் என உணர்ந்து, பயணத்திற்கு தயாராகிறார். அந்த வேளையில் அவரை ஒரு ஓநாய் கூட்டம் தாக்குகிறது. அதில் ஒரு ஓநாய் காயம் ஏற்பட்டு விழுந்து விடுகிறது.
மற்ற ஓநாய்கள் சென்று விடுகின்றன.
படத்தின் நாயகன் அந்த ஓநாயிடம் பாசம் காட்டி அதற்கு உணவு வழங்கி அதனை குணப்படுத்துகிறார்.
பிறகு இருவரும் சேர்ந்து பயணத்தை தொடர்கின்றனர். இந்த ஓநாயின் வருகை கதாநாயகனுக்கு என்னென்ன மாற்றங்களை கொண்டுவந்தது? இறுதியில் இந்த ஓநாயை மக்கள் ஏற்றுக் கொண்டனரா? என்பதே படத்தின் மீதி கதை.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.