Hollywood Movie Tamil Review
The guest 2014
(விருந்தாளி)
கதைகரு :
விருந்தினராக வரும் இளம் நபரின் வினோத செயல்கள்.
கதை சுருக்கம் :
ராணுவத்தில் தன் மகனை இழந்து வருத்தத்தில் உள்ளது ஒரு குடும்பம்.
அந்தக் குடும்பத்தில் ராணுவ வீரனின் அம்மா , அப்பா , வீரனின் தங்கை மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர்.
இந்த வருத்தமான தருணத்தில் அவரின் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வருகிறார்.
இளம் வாலிபராக காட்சி அளிக்கும் அவர் அவர்களின் மகனோடு வேலை செய்த வீரர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைகிறார்.
தனது மகனுடன் வேலை செய்தவர் என்பதால் அவரை மிகுந்த அக்கறையுடன் இவர்கள் பார்த்துக் கொள்கின்றனர்.
அந்த நபரோ அந்த குடும்பத்தை தனது குடும்பம் போல பாதுகாக்க தொடங்குகிறார்.
அந்த வீட்டிலிருக்கும் சிறுவனுக்கு படிக்கும் இடத்தில் சில பேர் தொல்லை கொடுப்பதை அறிந்து அவர்களை பழிக்கு பழி வாங்குகிறார்.
அதேபோல் அந்த வீட்டில் இருக்கும் வீரனின் தங்கையின் வாழ்க்கையில் நுழைந்து சில மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.
அதன்பிறகு அந்த குடும்பம் தங்களை சுற்றியுள்ள பல பேர் தொடர்ச்சியாக மர்மமாக இறப்பதை அறிகின்றனர்.
அதன் பிறகுதான் விருந்தாளியாக வந்த நபர் தனது மகனுடன் வேலைபார்த்தவர் அல்ல என்பதை அறிகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் அவனைத் தேடி ராணுவப்படையினர் வருகின்றனர்.
அதன்பிறகுதான் அவர் எவ்வளவு மோசமானவர் என்பதை மொத்த குடும்பமும் அறிந்து கொள்கிறது.
அந்த நபரிடம் இருந்து இந்த குடும்பம் உயிருடன் பிழைத்ததா என்பதே படத்தின் மீதி கதை.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.