Hollywood Movie Tamil Review
Crawl 2019
( தவல்தல் )
கதைகரு :
கொடூரமான முதலையிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க போராடும் தந்தை மகள்.
கதை சுருக்கம் :
மிகப்பெரிய சூறாவளியின் காரணமாக நாடு முழுவதும் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தனிமையாக இருக்கும் தன் தந்தையிடமிருந்து எந்த ஒரு செய்தியும் கிடைக்காததால் அவரைத் தேடி செல்ல முடிவு செய்கிறாள் ஒரு இளம் பெண்.
காவலர்களை ஏமாற்றிவிட்டு தன் தந்தையின் வீட்டிற்கு செல்கிறாள்.
அங்கே தந்தையின் செல்லப் பிராணியான நாய் இருப்பதை கண்டுபிடிக்கிறார்.
அந்த நாயின் உதவியோடு தன் தந்தை அந்த வீட்டின் அடிப்பகுதியில் இருப்பதை அறிகிறாள்.
அங்கே அவளின் தந்தை ரத்த காயங்களுடன் இருக்கிறார். பிறகுதான் அங்கே மோசமான முதலைகள் இருப்பதை உணர்கிறாள்.
தன் தந்தையை வெளியில் அழைத்து செல்லலாம் என எண்ணும் போது அவளை முதலைகள் தாக்கத் தொடங்குகின்றன.
வெளியில் செல்ல வழி தெரியவில்லை.
தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன்னும் சிறிது நேரத்தில் அடிப்பகுதி முழுவதும் தண்ணீரால் நிரம்பி விடும்.
அப்போது சுலபமாக முதலையுடன் சிக்கிக் கொள்ள வேண்டும் என அறிந்து , அதற்குள் தப்பித்து செல்ல பல வழிகளை முயற்சிக்கிறாள்.
ரத்தவெறி கொண்ட முதலைகள் இவர்களை விடாமல் தாக்குகிறது.
இவர்கள் இருவரும் எப்படி அந்த முதலைகளிடம் இருந்து தப்பித்து உயிருடன் வந்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.