Hollywood Movie Tamil ReviewThe box
கதைகரு :
பரிசு பெட்டியின் பொத்தானை அழுத்தினால் மரணம்.
கதை சுருக்கம் :
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி தங்களுடைய மகனுடன் சாதாரண வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் வாழ்க்கையில் திருப்பமாக வினோதமான முகம் கொண்ட ஒரு மனிதர் இவர்களின் வீட்டிற்கு வருகிறார்.
வீட்டில் மனைவி மட்டுமே இருக்கிறாள்.
அந்த நபர் மனைவியிடம் ஒரு பெட்டியினை கொடுக்கிறார்.
அதில் உள்ள பொத்தானை அழுத்தினால் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாக கூறுகிறார்.
ஆனால் அதன் விளைவாக உங்களுக்குத் தெரியாத ஒரு நபர் இந்த உலகத்தில் இருந்து இறந்துவிடுவார் என கூறி சென்று விடுகிறார்.
கணவனிடம் மனைவி நடந்ததை கூறுகிறாள்.
அந்த பெட்டியில் எதுவும் இல்லை, வெறும் மரப்பெட்டிதான் எனவும் இது ஒரு பொய்யான நிகழ்வு எனவும் கணவன் கூறுகிறான்.
வீட்டின் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெட்டியில் உள்ள பொத்தானை மனைவி அழுத்தி விடுகிறாள்.
அடுத்த கணமே அந்த நபர் மீண்டும் வந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு தங்களுக்குத் தெரியாத நபர் இறந்து விட்டதாக கூறி சென்றுவிடுகிறார்.
அதேபோல் இந்தப் பெட்டி மறுபடியும் உங்களுக்குத் தெரியாத ஒரு நபரிடம் இதேபோன்று கொடுக்கப்படும் எனக் கூறி சென்று விடுகிறார். அதன்பிறகுதான் கணவனுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது.
இதன்பிறகு இவர்களின் வாழ்க்கையில் அந்தப் பெட்டியினால் ஏற்படும் மர்மங்கள் தான் மீதி கதை.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.