The Thing 2011 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
The Thing 2011


கதைகரு :

மனித உருவம் எடுக்கும் வேற்றுகிரகவாசி.

கதை சுருக்கம் :

ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகா கண்டத்தில் உறைந்த விண்கலம் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர்.

அதனை பரிசோதிப்பதற்காக அங்கே செல்கின்றனர்.

அங்கே உறைந்த பனியில் ஒரு வினோதமான வேற்றுகிரகவாசி இருப்பதை கண்டுபிடித்து அதனை சோதனை செய்ய முடிவு செய்கின்றனர்.

 அதனை சோதனை பெட்டியில் அடைத்து வைத்துவிட்டு இவர்கள் மாலை நேரத்தில் தங்களது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். 

அப்போது அந்தப் பெட்டியில் இருந்த வேற்றுகிரகவாசி வெளியில் வந்து அவர்களுடைய நாயை கொன்று விடுகிறது. 

பிறகு அதனைத் தேடி தேடுதல் வேட்டை ஆரம்பிக்கின்றனர். அதனை கண்டுபிடித்து நெருப்பினால் எரித்து கொன்று விடுகின்றனர்.

ஆனால் அதன் பிறகுதான் அது வேற்று கிரகவாசி அல்ல தங்களது குழுவில் உள்ள ஒரு நபர் என்பதை கண்டுபிடிக்கின்றனர்.

மீண்டும் வேற்றுகிரகவாசியை தேடுகின்றனர்.

ஆனால் கிடைக்கவில்லை. 

அடுத்த நாள் மீண்டும் ஒரு நபர் வேற்று கிரகவாசியாக மாறுகிறார். 

இதன் மூலம்தான் அந்த வேற்று கிரகவாசியானது மனிதர்களின் உடல்களை போன்று  உருமாற்றம் செய்யக் கூடியது என்பதை அறிகின்றனர். வேற்றுகிரகவாசியிடமிருந்து இவர்கள் எப்படி உயிரோடு பிழைத்தனர் என்பதே மீதிக்கதை.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏


No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.