The grey 2011 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review

The grey 2011

(ஓநாய்)


கதைகரு :


கொடுரமான ஓநாய்களுடன் மாட்டிக்கொள்ளும் விமான பயணிகள்.


கதை சுருக்கம் :


என்ணெய் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் தனது குழுவுடன் விமானத்தில் பயணம் செய்கிறார். 

எதிர்பாராத விதமாக இயந்திர கோளாரால் விமானம் பாதிவழியில் பழுதடைந்து பனிப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிறது. 

விமானத்தில் இருந்த சிலர் மட்டுமே உயிருடன் தப்பிக்கின்றனர். 

யாரும் இல்லாத அந்த இடத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என திட்டமிடுகின்றனர். 

ஆனால் அதனை கடினமாக்கும் விதமாக அங்கே கொடூரமான ஓநாய்கள் வருகின்றன. 

ஓநாய்கள் இவர்கள் தனியாக இருப்பதை உணர்ந்து கொண்டு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றன. 

அதில் சிலரை கொல்கின்றன. 

ஓநாயிடம் இருந்து தப்பிக்க என்ன செய்வது என தெரியாமல் இவர்கள் திண்டாடுகின்றனர். 

ஒரே இடத்தில் இருந்தால் சுலபமாக சிக்கிக் கொள்வோம் என அறிந்து கொண்டு நடக்கத் தொடங்குகின்றனர். 

ஆனாலும் ஓநாய்கள் மீண்டும் மீண்டும் வந்து தாக்குகின்றன. 

ஒரு கட்டத்திற்குப் பிறகு ஓநாய்களுடன் நேரடியாக மோதுவதற்கு தயாராகின்றனர். 

சிலர் தானாக முன்வந்து உயிர் தியாகம் செய்கின்றனர். 

இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றது மனிதர்களா? ஓநாய்களா? 

என்பதே படத்தின் மீதி கதை.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 

நன்றி.🙏

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.