Hollywood Movie Tamil ReviewThe Strangers 2008
கதைகரு :
தனிமையில் இருக்கும் காதல் ஜோடியை குறிவைத்துத் தாக்கும் முகமூடி மனிதர்கள்
கதை சுருக்கம் :
ஒரு காதல் ஜோடி ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்று விட்டு வீடு திரும்புகின்றனர்.
திரும்பும் வழியில் ஆண் அந்தப் பெண்ணை ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கே அந்தப் பெண்ணை தான் மணம்முடிக்க விரும்புவதாக கூறுகிறார்.
ஆனால் இதனை சிறிதும் எதிர்பார்க்காத அந்த பெண் மறுத்து விடுகிறாள்.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டை விட்டு சிறிது நேரம் சென்று வருவதாக கூறி செல்கிறார்.
இவர் சென்ற பின் அந்த பெண் தனிமையில் இருக்கிறாள்.
அந்த தங்கும் விடுதியில் தங்களைத் தவிர வேறு யாருமில்லை என்பதை உணர்கிறாள்.
திடீரென தன்னை சுற்றி யாரோ இருப்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.
அதன் பிறகு வெளியில் சென்ற ஆண் மீண்டும் வருகிறார்.
அவர் வந்த பின்பும் தங்களின் அறைக்கு வெளியே யாரோ இருப்பது போன்று தோன்றுகிறது.
அதன் பிறகுதான் அந்த அறையைச் சுற்றி முகமூடி அணிந்த வினோதமான நபர்கள் உலா வருவதை அறிகின்றனர்.
இவர்களின் நோக்கம் புரிந்து கொண்டு தங்களை காப்பாற்றிக் கொள்ள அறையின் கதவுகளை மூடுகின்றன.
ஆனால் நேரம் கடந்து விட்டது.
அந்த மனிதர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து விட்டார்கள்.
நுழைந்தவர்கள் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்த தொடங்குகின்றனர்.
தனிமையில் சிக்கிய இந்த காதல் ஜோடி உயிருடன் பிழைக்குமா?
என்பதே படத்தின் மீதிக்கதை.
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.