Hollywood Movie Tamil Review
Ma 2019
( மா )
கதை கரு :
சைக்கோ பெண்மணியிடம் சிக்கி தவிக்கும் சிறுவர்கள்.
கதை சுருக்கம் :
படத்தில் ஆண்/பெண் என நிறைய சிறுவர்கள் உள்ளனர்.
இவர்கள் ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடிக்க திட்டமிடுகின்றனர்.
ஆனால் அந்த நாட்டில் சிறுவர்கள் மதுபானம் வாங்க இயலாது.
எனவே மதுபானம் வாங்கித் தருவதற்கு பலரிடம் உதவி கேட்கின்றனர்.
அப்போதுதான் ஒரு நடுத்தர வயது மிக்க பெண்மணி அறிமுகமாகி இவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்து தன் வீட்டிலேயே அதை குடிக்கவும் அழைக்கிறார்.
சிறுவர்களும் அந்தப் பெண்மணியின் வீட்டிற்கு செல்கின்றனர்.
ஆனால் அதன் பிறகு அந்தப் பெண்மணி அடிக்கடி சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைக்கிறாள்.
அவள் தனிமையாக இருப்பதால் அவர்களின் நட்பின் மூலம் மகிழ்ச்சியாக மாறுகிறாள்.
ஆனால் ஒரு கட்டத்தில் சிறுவர்கள் பெண்மணியை நிராகரிக்கும் பொழுது அவளின் மனநிலை பாதிக்கப்பட்டு சைக்கோவாக மாறுகிறாள்.
அதுமட்டுமில்லாமல் அதன் பிறகுதான் அந்தப் பெண்மணிக்கும் தங்களுக்கும் இருக்கும் பல உண்மைகள் சிறுவர்களுக்கு தெரிய வருகிறது.
இந்த சிறுவர்கள் சைக்கோ பெண்மணியிடம் இருந்து எப்படி பிழைத்தார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.