Hollywood Movie Tamil ReviewThe call 2013
கதைகரு :
கடத்தப்பட்ட பெண்ணை தொலைபேசியின் மூலம் காப்பாற்றத் துடிக்கும் 911 பணியாளர்.
கதை சுருக்கம் :
911 அவசர பணியில் வேலை பார்க்கும் பெண் தனது தவறான முடிவால் ஒரு பெண் குழந்தையை பலி கொடுக்கிறாள்.
இதனால் மனம் உடைந்த அவள் அந்தப் பணியை விட்டு நீங்கி விடுகிறாள்.
சில வருடங்களுக்குப் பிறகு அந்த ஊரில் ஒரு பெண் கடத்தப்படுகிறாள்.
கடத்தல்காரன் அவளை காரின் பின்னால் உள்ள பகுதியில் அடைத்து வைக்கிறான்.
அவளிடம் தொலைபேசி இருப்பதை அறியாமல் கடத்திக்கொண்டு செல்கிறான்.
காரின் பின்னால் மாட்டிக்கொண்ட பெண் 911 உதவியை அழைக்கிறாள்.
இவளை காப்பாற்ற துல்லியமாக செயல்படும் ஒரு நபர் வேண்டுமென பணியிலிருந்து நீங்கி சென்ற அந்தப் பெண்ணை மீண்டும் அழைக்கின்றனர்.
அந்தப் பெண்ணோ முதலில் ஏற்க மறுக்கிறாள்.
ஆனால் பின்பு முன்பு நடந்த சம்பவத்தை மறக்க அதிலிருந்து மீண்டுவர இதை நாம் செய்ய வேண்டும் என புரிந்து கொண்டு தன்னால் முடிந்தவரை புத்திசாலித்தனமாக செயல்பட்டு அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து பல தகவல்களைப் பெற்று கடத்தல்காரன் நெருங்குகின்றனர்.
அலைபேசியின் மூலம் கடத்தப்பட்ட பெண்ணை 911 பணியாளர் உயிருடன் காப்பாற்றினாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.