The good neighbour 2016 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review


The good neighbour 2016


(நல்ல பக்கத்துவீட்டு காரர்)


கதைகரு :


விளையாட்டிற்காக வயதானவர் வீட்டில் கேமரா வைத்து பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் இளம் வாலிபர்கள்.


கதை சுருக்கம் :


இரண்டு இளம் நண்பர்கள் சோதனைக்காக பக்கத்துவீட்டில் கேமரா வைத்து அங்கு நடக்கும் வினோதங்களை கண்டறிய திட்டமிடுகின்றனர்.

இதற்காக தங்களுக்கு என்று ஒரு பிரத்யேக அறையை உண்டாக்கி, அதற்கு தேவையான உபகரணங்களை வாங்குகின்றனர்.

அவர்கள் தேர்ந்தெடுத்த வீட்டில் ஒரு வயதானவர் மட்டுமே தனிமையாக தங்கியுள்ளார்.

அவர் தனது மனைவியை கொன்றதாக அக்கம்பக்கத்தினர் பேசிக்கொள்கின்றனர். 

எனவே அவரிடம் ஏதேனும் அமானுஷ்யங்கள் இருக்கலாம் என திட்டமிட்டு அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீடு முழுவதும் கேமராக்களை பொருத்துகின்றனர்.

ஆரம்பத்தில் சுவாரசியம் குறைவாக இருப்பதால் அதன் பிறகு அந்த வயதானவர் உடன் விளையாட தொடங்குகின்றனர். 

அந்த வீட்டில் பேய் இருப்பது போன்ற போலியான செயல்களை செய்து அந்த வயதானவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர். 

உதாரணமாக கதவுகளை தானாக இயக்கி சத்தமிட செய்கின்றனர். 

வீட்டிலுள்ள தொலைக்காட்சியை தானாக இயக்குகின்றனர்.

ற்கனவே குற்ற உணர்ச்சியில் இருக்கும் வயதானவர் இவர்களின் செயல்களுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இவர்களை அச்சத்தில் உறைய செய்கின்றது.

அது என்ன என்பதே  மீதி படம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 

நன்றி.🙏

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.