Awake 2007 Hollywood movie tamil review

Hollywood movie tamil review

Awake 2007


கதைகரு :

இருதய அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து வேலை செய்யவில்லை என்றால்?

கதை சுருக்கம் :

படத்தின் கதாநாயகன் மிகப் பெரிய பணக்காரன்.

 அவன் தாயுடன் வசித்து வருகிறான். 

குடும்பத்தில் வேறு யாருமில்லை. 

அவர்களின் கணக்குகளைப் பார்த்துக் கொள்ள ஒரு இளம்பெண் வேலையில் உள்ளாள்.

மகனோ அந்தப் பெண்ணுடன் காதல் கொள்கிறான்.

 இவர்களின் காதலை தன் தாயிடம் எப்படி கூறுவது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.

மகனுக்கு உடலில் பிரச்சனைகள் உள்ளன. 

அவனுக்கு இருதயம் மாற்றப்பட வேண்டும்.

இல்லையென்றால் அவன் விரைவாக இறந்துவிடுவான். 

இதன் காரணமாக மிகப்பெரிய டாக்டர்களை தாய் வர வைக்கிறார்.

ஆனால் மகனோ தாயிடம் கோபம் கொண்டு தனது உயிர் நண்பன் ஒரு மருத்துவர் எனவும், அவன் தான் தனக்கு இருதயத்தை மாற்ற போகிறான் எனவும் உறுதியாகக் கூறிவிடுகிறான். 

அறுவை சிகிச்சை நடக்கிறது. 

ஆனால் சிகிச்சையின் போது தனக்கு மயக்க மருந்து வேலை செய்யவில்லை என்பதை அறிகிறான்.

ஆனால் அவனது உடலானது மயங்கி விட்டது. 

ஆனால் அவனால் வலியினை உணர முடிகிறது. 

துடிக்கிறான். 

கதறுகிறான். 

அவனின் உயிரானது உடலை விட்டுப் பிரிந்து வெளியே உலவுகிறது. 

அப்பொழுதுதான் தன்னைச் சுற்றி நடக்கும் பல ஏமாற்று சதிவேலைகளை கண்டறிகிறான். 

தனது உடலை காப்பாற்றி மீண்டும் இவன் உயிர் பிழைத்தானா என்பதே துரோகங்கள் நிறைந்த மீதிக்கதை.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏



Friend Request 2016 Hollywood movie tamil review

Hollywood movie tamil review

Friend request 2016


கதைகரு :

இணைய நட்பில் மூலம் ஏற்படும் விபரீதம்

கதை சுருக்கம் :

படத்தின் கதாநாயகி கல்லூரியில் மிகவும் பிரபலம் அவளுக்கு ஃபேஸ்புக்கில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் அதே கல்லூரியில் சற்று வினோதமான முகம் கொண்ட பெண் ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கு நண்பர்களே கிடையாது அவள் படத்தின் கதாநாயகியை கண்டு அவருடன் நட்பாக வேண்டும் என இணையதளம் மூலம் அழைப்பு கொடுக்கிறாள் கதாநாயகியோ அவள் மீது இரக்கப்பட்டு அதனை ஏற்றுக் கொள்கிறாள் இருவரும் நண்பர்கள் ஆகின்றனர் நேரிலும் நன்றாக பேசி பழகுகிறான் ஆனால் ஒருமுறை கதாநாயகி தோழியிடம் கூறாமல் ஒரு விருந்துக்கு சென்றுவிடுகிறாள் அதனை இணையதளம் மூலம் கண்டுபிடித்த வினோதமான தோழி கோபத்தில் சண்டையிடுகிறார் சண்டையின் காரணமாக அவளை கதாநாயகி கோபமாக பேசிவிட்டு இணையதளத்திலிருந்து நட்புப் பட்டியலில் நீக்கி விடுகிறாள் இதனால் மனதளவில் காயப்பட்ட அந்தப் பெண் லேப்டாப் முன்னிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் அதன் பின்னர் கதாநாயகியின் நண்பர்கள் ஒவ்வொருவராக கொடூரமான முறையில் இறக்கின்றனர் அவர்கள் இறக்கும் வீடியோக்கள் கதாநாயகியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படுகின்றன இதனை தடுக்க முடியாமல் கதாநாயகி திணறுகிறாள் இணையதளம் மூலம் இவளை அமானுஷ்யத் இடமிருந்து இவர் எப்படி தப்பித்தார் என்பதே மீதிக்கதை.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏


Downrange 2017 Hollywood movie tamil review

Hollywood movie tamil review

Downrange 2017


கதைகரு :

கொலைகார Sniper நபரிடம் மாட்டித் தவிக்கும் நண்பர்கள்.

கதை சுருக்கம் :

நண்பர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். 

அதில் ஆண்களும் பெண்களும் பலர் இருக்கின்றனர். 

கார் ஆளில்லாத காட்டு சாலை பகுதியில் செல்லும் போது காரின் டயர் பஞ்சர் ஆகி விடுகிறது .

இதனால் காரை நிறுத்திவிட்டு சரி செய்ய முயற்சி செய்கின்றனர்.

 அந்த நேரத்தில்தான் டயர் துப்பாக்கியின் தோட்டாவால் பஞ்சர் ஆனது தெரிய வருகிறது. 

அப்போது திடீரென ஸ்னைப்பர் துப்பாக்கியிலிருந்து தோட்டா பாய்ந்து வந்து ஒருவரை தாக்குகிறது.

கண்ணிமைக்கும் நொடியில் அவர் இறந்துவிடுகிறார்.

 மற்றவர்களுக்கோ நடந்தது என்ன என்பது புரியவில்லை.

சிறிது நேரத்தில் மற்றொரு தோட்டா இன்னொரு நபரையும் தாக்குகிறது.

பிறகுதான் அவர்களை தூரத்திலிருந்து சுடும் துப்பாக்கியின் மூலம் யாரோ சுடுகின்றனர் என்பதை அறிகின்றனர். 

தப்பிக்க வழியில்லை.

அனைவரும் காரின் அருகிலும், மரத்தின் அருகிலும் சென்று ஒழிகின்றன.

இவர்களை சுடுவது யார்?

இந்த கொலைகாரனிடமிருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே மீதிக்கதை.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏


The Thing 2011 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
The Thing 2011


கதைகரு :

மனித உருவம் எடுக்கும் வேற்றுகிரகவாசி.

கதை சுருக்கம் :

ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகா கண்டத்தில் உறைந்த விண்கலம் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர்.

அதனை பரிசோதிப்பதற்காக அங்கே செல்கின்றனர்.

அங்கே உறைந்த பனியில் ஒரு வினோதமான வேற்றுகிரகவாசி இருப்பதை கண்டுபிடித்து அதனை சோதனை செய்ய முடிவு செய்கின்றனர்.

 அதனை சோதனை பெட்டியில் அடைத்து வைத்துவிட்டு இவர்கள் மாலை நேரத்தில் தங்களது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். 

அப்போது அந்தப் பெட்டியில் இருந்த வேற்றுகிரகவாசி வெளியில் வந்து அவர்களுடைய நாயை கொன்று விடுகிறது. 

பிறகு அதனைத் தேடி தேடுதல் வேட்டை ஆரம்பிக்கின்றனர். அதனை கண்டுபிடித்து நெருப்பினால் எரித்து கொன்று விடுகின்றனர்.

ஆனால் அதன் பிறகுதான் அது வேற்று கிரகவாசி அல்ல தங்களது குழுவில் உள்ள ஒரு நபர் என்பதை கண்டுபிடிக்கின்றனர்.

மீண்டும் வேற்றுகிரகவாசியை தேடுகின்றனர்.

ஆனால் கிடைக்கவில்லை. 

அடுத்த நாள் மீண்டும் ஒரு நபர் வேற்று கிரகவாசியாக மாறுகிறார். 

இதன் மூலம்தான் அந்த வேற்று கிரகவாசியானது மனிதர்களின் உடல்களை போன்று  உருமாற்றம் செய்யக் கூடியது என்பதை அறிகின்றனர். வேற்றுகிரகவாசியிடமிருந்து இவர்கள் எப்படி உயிரோடு பிழைத்தனர் என்பதே மீதிக்கதை.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏


The box 2008 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
The box

கதைகரு :

பரிசு பெட்டியின் பொத்தானை அழுத்தினால் மரணம்.

கதை சுருக்கம் :

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி தங்களுடைய மகனுடன் சாதாரண வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

இவர்களின் வாழ்க்கையில் திருப்பமாக வினோதமான முகம் கொண்ட ஒரு மனிதர் இவர்களின் வீட்டிற்கு வருகிறார். 

வீட்டில் மனைவி மட்டுமே இருக்கிறாள்.

அந்த நபர் மனைவியிடம் ஒரு பெட்டியினை கொடுக்கிறார். 

அதில் உள்ள பொத்தானை அழுத்தினால் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாக கூறுகிறார்.

ஆனால் அதன் விளைவாக உங்களுக்குத் தெரியாத ஒரு நபர் இந்த உலகத்தில் இருந்து இறந்துவிடுவார் என கூறி சென்று விடுகிறார்.

கணவனிடம் மனைவி நடந்ததை கூறுகிறாள். 

அந்த பெட்டியில் எதுவும் இல்லை, வெறும் மரப்பெட்டிதான் எனவும் இது ஒரு பொய்யான நிகழ்வு எனவும் கணவன் கூறுகிறான். 

வீட்டின் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெட்டியில் உள்ள பொத்தானை மனைவி அழுத்தி விடுகிறாள். 

அடுத்த கணமே அந்த நபர் மீண்டும் வந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு தங்களுக்குத் தெரியாத நபர் இறந்து விட்டதாக கூறி சென்றுவிடுகிறார். 

அதேபோல் இந்தப் பெட்டி மறுபடியும் உங்களுக்குத் தெரியாத ஒரு நபரிடம் இதேபோன்று கொடுக்கப்படும் எனக் கூறி சென்று விடுகிறார். அதன்பிறகுதான் கணவனுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

இதன்பிறகு இவர்களின் வாழ்க்கையில் அந்தப் பெட்டியினால் ஏற்படும் மர்மங்கள் தான் மீதி கதை.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏

Wish upon 2017 Hollywood movie tamil review

Hollywood Movie Tamil Review
Wish upon 2017


கதை சுருக்கம் :

கேட்டதை செய்யும் மந்திர பெட்டி மூலம் நடக்கும் மரணங்கள்.

கதைகரு :

எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு சிறு வயதில் தனது தாய் தூக்கிட்டு இறந்து போன நினைவுகளால் அவதிப்படுகிறாள்.

அவளின் தந்தை குப்பைகளை அகற்றும் பணியாளர். 

அவருக்கு ஒரு மந்திர பெட்டி கிடைக்கிறது.

அந்த இசை பெட்டியை தனது மகளிடம் கொடுக்கிறார். 

அது ஆசைகளை நிறைவேற்றும் பெட்டி என்பதை அறிந்துகொண்டு விளையாட்டாக தன்னை மிகவும் கேலி செய்த சக மாணவி ஒருத்தி அழுகிப் போக வேண்டும் என கேட்டுக் கொள்கிறாள். 

அடுத்த நாள் அதே போல் அந்த மாணவி கொடிய நோயால் முகம் முழுவதும் அழுகிய நிலைக்கு சென்று விடுகிறாள். 

இதன் பிறகுதான் இந்த பெட்டியை பற்றி அறிந்துகொண்டு தனக்கு பிடித்த விஷயங்களை கேட்கிறாள். 

மொத்தம் ஏழு ஆசைகள் நிறைவேற்றப்படும் என பெட்டியில் குறிப்பிட்டுள்ளது. 

ஆனால் அதன் விளைவாக ரத்தம் வசூலிக்கப்படும் என பொறிக்கப்பட்டிருக்கிறது. 

அந்த பெண் கேட்கும் அனைத்து ஆசைகளுக்கும் அந்தப் பெண்ணின் உடன் இருக்கும் சில மனிதர்கள் கொடூரமான முறையில் இறக்கின்றனர்.

இவள் தனது ஆசைகளாக பணக்காரியாக மாறுவதும், சக மாணவன் ஒருவன் தன்னை காதலிக்க வேண்டும் எனவும் பல வகையான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறாள். 

ஆனால் இறுதியில்தான் இந்தப் பெட்டியானது 7 ஆசைகளையும் தீர்த்த உடன் அந்த ஆசைகளை கேட்டவரின் உயிரை எடுத்துக் கொள்ளும் என்பதை அறிகிறாள்.

பெட்டியை அழிக்க முடியவில்லை. 

தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் பெட்டியிடமிருந்து எப்படி உயிர் தப்பிப்பது என போராடுகிறாள். 

பெட்டி இவளை உயிருடன் விட்டதா என்பதே மீதிக்கதை.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏

Bad samaritan 2018 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
Bad samaritan 2018

கதைகரு :

திருடச்சென்ற இடத்தில் கடத்தப்பட்டு வைத்திருக்கும் பெண்ணை காப்பாற்ற போராடும் திருடன்.

கதை சுருக்கம் :

இளைஞர்கள் இரண்டு பேர் திருட்டு தொழில் செய்கின்றனர்.

கார்கள் நிறுத்தும் இடத்திற்கு வரும் கார்களை உடைத்து அதன்மூலம் அவர்களின் வீடுகளுக்குச் சென்று திருடிவிட்டு மீண்டும் பழைய இடத்திலேயே காரை நிறுத்திவிடுவது தான் இவர்களின் திருட்டு வேலை. 

அந்தவகையில் ஒரு பணக்கார காரினை திருடி அதன் உரிமையாளர் வீட்டுக்கு செல்கின்றனர்.

அங்கே திருடும் போது ஒரு ரகசிய அறையை கண்டுபிடிக்கின்றனர். 

அந்த அறையில் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டு மோசமான நிலையில் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை காண்கிறார் நாயகன். 

அவளை காப்பாற்ற காவல்துறையினரிடம் தகவல் கொடுக்கிறார்.

ஆனால் அவர்கள் வந்து பார்க்கும் பொழுது அந்த அறையும் அந்த பெண்ணும் அங்கு இல்லை. 

அந்த வீட்டின் உரிமையாளர் இந்த திருடனைப் பற்றி அறிந்து கொள்கிறார். 

தனது பண பலத்தை கொண்டு இந்தத் திருடனின் வாழ்க்கையில் பல வினோதமான செயல்களை ஏற்படுத்துகிறார். 

திருடன் பணக்காரரிடம் மோத முடியாமல் சிக்கித் தவிக்கிறார். 

இறுதியில் கடத்தப்பட்ட பெண்ணை இந்த திருடன் காப்பாற்றினாரா? 

இல்லை பணக்காரனிடம் சிக்கிக் கொண்டு தன் உயிரை இழந்தாரா? 

என்பதே படத்தின் மீதி கதை


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏